ட்டக்களப்பில் கொரோனா முடக்கத்திற்கு மத்தியிலும் நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான பிரதமரின் அபிவிருத்தி திட்டபணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதியின் சௌபாக்கியா திட்டத்திற்கமைவாக “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 15 பயனாளிகளுக்கான காசோலை வழங்குவதற்கான நிகழ்வு இன்று(23)சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் க. ஜெகநாதன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இவ்நிகழ்விற்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வீ.வாசுதேவன்,ரீ.எம்.வீ.பி கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி ஷங்கர், ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்கள்.இதன்போது ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி வைத்தனர்.தற்போதுள்ள கொரோனா முடக்கத்திற்கு மத்தியிலும் நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான பிரதமரின் அபிவிருத்தி திட்டபணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.