நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக நாட்டிலுள்ள 33 நீர்த் தேங்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்தள்ளது.
இதன் காரணமாக நீர் மின் உற்பத்தி 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, காசல் ரீ நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 45.9 வீதத்தினாலும் மவுசாகலை நீர்த் தேகத்தின் நீர் மட்டம் 44 வீதத்தினாலும் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 65.6 வீதத்தினாலும் விக்டோரியா நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 19.6 வீதத்தினாலும் ரந்தனிகல நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 23.4 வீதத்தினாலும் சனலகல நீர்த் தேகத்தின் நீர் மட்டம் 23.4 வீதத்தினாலும் உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, வறட்சியுனான வானிலையின் போது, பிரதான நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைவடைந்ததால் சவாலான நிலை ஏற்பட்டிருந்ததாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, பலத்த காற்றுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்ட மின் தடை வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.