பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.
சேலம்- சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே சேலம் – குள்ளம்பட்டி மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் இதன்போது சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதியிலுள்ள விளைச்சல் நிலங்களை அரசு கைப்பற்றுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் விளைநிலங்கள், காடுகள், நீர் நிலைகள் மற்றும் மலைகள் ஆகியவற்றை அழித்து, பசுமைவழிச் சாலையை அமைப்பது மக்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் செயலெனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனால் 8 வழிச்சாலையை அரசு கைவிட வேண்டுமென மக்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.