சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட சைட்டம் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டத்தில் சைட்டம் என்ற பெயரை நீக்கியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தாமரை தடாகத்தில் (06) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
சைட்டம் மாணவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டதில் அவர்களுக்கு வழங்கப்படும் பட்டத்தில் அடைப்புக்கள் சைட்டம் என குறிப்பிட தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் இதற்கு மாணவர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.