பல்கலைக்கழகங்களுக்கு 2019/2020ஆம் கல்வியாண்டிற்கு தெரிவாகும் இலங்கை மாணவர்களுக்கு சவூதி அரேபியாவை தலைமையகமாக கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளது.
இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் இளமாணி பட்டதாரிகளுக்கான புலமைப் பரிசில், கலாநிதி பட்டக் கற்கைகளுக்கான புலமைப் பரிசில், பட்டப்பின் பட்ட புலமைப் பரிசில், கலாநிதி பட்டப்பின் ஆராய்ச்சிக்கான புலமைப் பரிசில் என நான்கு வகையான புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
மருத்துவம்,பொறியியல்,விஞ்ஞான கற்கைகள், தகவல் தொழில்நுட்பம், விலங்கு மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு மாதாந்தம் இலங்கை நாணயப் பெறுமதியில் 5000ரூபா பெறுமதியான புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் www.isdb.org எனும் இணையத்தளத்திற்கு ஒன்லைன் மூலம் மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இவ்வங்கி அறிவித்துள்ளது.
வழமையாக மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையமூடாகவே இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. தற்போது ஒன்லைன் மூலம் கோரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.