நாட்டில் ஒருலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய கிராமிய வீதிகளை கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் ஆரம்ப நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இன்று பிரதம அதிதியாக பங்கேற்றார்.
(22) காலை 12.00 மணியளவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிளாமடு கடற்கரை வீதியினை செப்பனிடும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் உத்தியோகபூர்வமாக வீதிகளை ஆரம்பித்து வைத்ததுடன், அப்பிரதேசத்தில் பயன்தரும் மரக் கன்று ஒன்றினையும் நாட்டிவைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை யின் உத்தியோகத்தர்கள் மற்றும் முற்போக்கு தமிழர் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது அங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமை ச்சர் இவ்வாறாக தமது மாவட்டத்திற்கு பல்வேறுபட்ட வீதி அபிவிருத்திப் பணிகளை வழங்கி உதவிபுரியும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாக தனது நன்றிகளை தெரிவித் ததுடன், எதிர்வரும் நாட்களில் பல்வேறு பட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் நான் உங்களை விரைவில் சந்திப்பேன் என கூறினார்.