பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிப்பதற்கு முன்னராக, அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, கல்வியமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வேலைத்திட்டத்தில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் உட்பட அனைவரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.