வருடா வருடம் பியூச்சர் மைண்ட் Future Mind அமைப்பினரால் துளிர் எனும் மர நடுகை செயற்றிட்டம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 2018 ஆண்டிற்கான மர நடுகை செயற்றிட்டம் 20 ஆம் திகதி செங்கலடி , கொம்மாதுறை மற்றும் கொண்டயண்கேணி ஆகிய இடங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த பியூச்சர் மைண்ட் (Future Mind) அமைப்பின் இயக்குனர் ம.ரஞ்ஜன்
இச் செயற்றிட்டமானது கடந்த வருடங்களை விட சற்று சிறப்பாக செய்ய வேண்டும் எனும் நோக்கிலும் இச் செயற்றிட்டம் எதிர்கால சந்ததியினருக்கு ஓர் நன்மையைத் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பல அணுசரனைகளான கெப்பிட்டல் வானொலியுடனும் கைகோர்த்தும் ஒட்டாறா பவுண்டேசன், எல்.ஓ.எல்.சீ மற்றும் , துரு அமைப்புடனும் இணைந்து பல்லாயிரக் கணக்கான மர நடுகை செயற்றிட்டத்தினை முன்னெடுக்கின்றோம்.
அத்துடன் இதன் ஆரம்ப நாளான இன்று எம்மோடு சிறப்பிக்க கெப்பிட்டல் வானொலியின் விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் ஒட்டாறா பவுண்டேசன், எல்.ஓ.எல்.சீ மற்றும் , துரு அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைய மர நடுகை இம்மாத இறுதிக்கு முன்னர் வாழைச்சேனை, கிரான், புணானை, வாகரை, சந்திவெளி வந்தாறுமூலை ஆகிய பிரதேசங்களிலும் நடைபெறவுள்ளதோடு ஜனவரி மாதமளவில் இச் செயற்திட்டம் மட்டக்களப்பு திருகோணமலை கல்முனை ஆகிய பிரதேசங்களை நோக்கி நகரவுள்ளது.
அந்தவகையில் இம்மரக் கன்றுகளை தொடர்ச்சியாக பராமரித்து வளர்ப்பவர்களுக்கு எமது அணுசரனையாளர்களின் இலட்சினையுடன் கூடிய சான்றிதழ் ஒன்றையும் வழங்கவுள்ளோம் என பியூச்சர் மைண்ட் (Future Mind) அமைப்பின் இயக்குனர் ம.ரஞ்ஜன் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது