பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவரை நீக்க வேண்டும் என்றால் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே நீக்க முடியும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“நாட்டில் பிரதமர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. இலங்கையின் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சபாநாயகருக்கோ பிரதமர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் கிடையாது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவேண்டும்.
ஒரே நாளில் நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றில் கொண்டு வர முடியாது என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.