இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரசியல் பிரச்சினைக்கு அப்பால் தான் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இனியாவது செயற்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
மேலும், மேற்கத்தேய சக்திகளின் நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்படாமல், மக்கள் பிரச்சினையை கருத்திற்கொண்டு செயற்படுவது அவசியமென நாமல் வலியுறுத்தியுள்ளார்.