உதவி செய்யாவிட்டால் சோர்ந்துபோய் ஒதுங்கியிருக்கப்போவதில்லை! தொடர்மாடி வீட்டுத்திட்ட மக்கள்முன் தவிசாளர் ஜெயசிறில்.

(காரைதீவு  நிருபர் சகா)
 
யாரும் உதவிசெய்யவில்லை என்பதற்காக சோர்ந்துபோய் ஒதுங்கியிருப்பவன் நானல்ல. இருக்குமிடம்சென்று எனது மக்களுக்காக எதையெல்லாம் பெற்றுக்கொடுக்கமுடியுமோ அதையெல்லாம் செய்வேன்.
 
இவ்வாறு காரைதீவு 2ஆம் பிரிவிலுள்ள சுனாமி தொடர்மாடி வீட்டுத்திட்ட மக்கள்முன்னிலையில் உரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
சுனாமியின்பின்னர் 2006இல் அமைக்கப்பட்ட இத்தொடர்மாடிவீட்டுத்திட்டத்தில் 12மாடிகள் உள்ளன.24குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒருமாடிக்கு அதாவது இருகுடும்பங்களுக்கு ஒரு மலசலகூடக்குழி;.அது ஒருவருடத்துள் நிறைந்துவிடுகின்றது.
 
இதனால் மாரிகாலம் நெருங்கிவிட்டால்போதும் பிரச்சினைமேல் பிரச்சனை. துர்நாற்றம் ஒரு புறம் சண்டைகள் மறுபுறம். மொத்தத்தில் மாரியில் வீட்டைவிட்டு வெளியேறி இடம்பெயர்ந்துவாழவேண்டிய துரதிஸ்டநிலை.
 
கடந்த 12வருடகாலமாக அங்கு நிலவிவந்த மலசலகூடக்குழிப் பிரச்சினை தொடர்பாக அங்குவாழும் பொதுமக்களால் பலஅரசியல்வாதிகளிடமும் கோரிக்கைவிடுக்கப்பட்டும் இறுதியில் தவிசாளரிடம் விடுத்த வேண்டுகோள் வெற்றியளித்திருக்கிறது.
 
அதனையொட்டிய இக்கூட்டம் நேற்று (18) தொடர்மாடி வளாகத்தில் நடைபெற்றது.
 
அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் பேசுகையில்:
 தங்கள் தொடர்மாடிவீடுகளிலுள்ள சகல மலசலகூடக்குழிகளுக்கும் பதிலாக புதிய குழிகள் அமைக்க நிதி புனர்வாழ்வு அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
 
அதற்கு வித்திட்டவர்கள் புனர்வாழ்வு கொள்கைத்திட்டமில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஜயா மேலதிகசெயலாளர் செந்தில்நந்தன் ஜயா ஆகியோருக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
 
தேர்தல் காலத்தில்மட்டும் வந்து அதைச்செய்வோம் இதைச்செய்வோம் என்றுகூறி உசுப்பேற்றிவிட்டு பின்னர் மாயமாகப்போவது நானல்ல. நீங்கள் என்னுடனேயே இருப்பீர்hகள். என்றார்.
 
மாடிவீட்டுத்தொகுதியில் வசிக்கும் பயனாளி கனகசுந்தரம் சுபாஜினி பேசுகையில்:
 
நாம் பலவருடகாலமாக எம்.பி. தம்பிமார்களிடமெல்லாம் எமது கழிவுப்பிரச்சினையை சொல்லிச்சொல்லி வந்திருக்கிறோம். ஒன்றும் ஆனதில்லை. ஆனால் ஒரேவாரத்தில் நீங்கள் மேலதிகசெயலாளர் செந்தில்நாதன் ஜயாவின் துணையோடு இதனைச்செய்துள்ளீர்கள். எமது மனமார்ந்த நன்றிகள். வெறும் வாய்ப்பேச்சை நாம் நம்பப்போவதில்லை. செய்யவேண்டும்.தமிழினம் அதனையே இன்று விரும்புகிறது.நாம் உங்களுடனேயே இருப்போம். என்றார்.

Related posts