புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் நகர்வுகள் குறித்து அரசியலமைப்பு சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச தரப்பினருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கும் இடையில் காரசாரமாக வாக்குவாதம் இடம்பெற்றது.
புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டுமானால் வாருங்கள் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுபோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கோரிக்கை விடுத்தார்.
அரசியலமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை முன்வைத்து அரசியல் அமைப்பு சபை இன்று காலை 10 மணிக்கு கூடிய வேளையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது உரையினை ஆரம்பித்தார்.
அதன்போது அரசியல் அமைப்பு குறித்து கருத்துக்களை முன்வைக்கும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப்பார்த்து சில கேள்விகளை எழுப்பிமை குறிப்பிடத்தக்கது.