புத்தாண்டில் கிழக்கில் 1200ஜத் தாண்டிய கொரோனாதொற்று!கல்முனையில் 809 மட்டக்களப்பில் 212 திருமலையில் 135 அம்பாறையில் 30

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 1200ஜத் தாண்டியது.புத்தாண்டில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் திவீரமாகிவருகின்றது. அங்கு நேற்றுவரை 1209 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
 
இத்தரவுகளை  கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.
 
கடந்த மார்ச் மாதமிருந்து  பேலியகொட மூலமாக இதுவரை    மட்டக்களப்பு மாவட்டத்தில் 212பேரும் கல்முனை பிராந்தியத்தில் 809பேரும் திருமலை மாவட்டத்தில் 135பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 30பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.கல்முனையில் கண்டுபிடிக்கப்பட்ட 809 தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது.
 
கல்முனை தெற்கில் 186 பேரும் காத்தான்குடியில் திடீரென 69பேரும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நிலைமை மோசமாகியது.
இதுவரை சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது  அட்டாளைச்சேனை வவுணதீவு மற்றும் காத்தான்குடியில் 06 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
 
கல்முனை பிராந்தியத்தில் 809..
 
கல்முனைப்பிராந்தியத்தில் 809ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை  771பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
அதில் அக்கரைப்பற்று306 அடுத்ததாக கல்முனை தெற்கு 186 தொற்றுக்கள் பொத்துவில் 76 அட்டாளைச்சேனை 71 சாய்ந்தமருது 37 ஆலையடிவேம்பு 31 இறக்காமம் 23 சம்மாந்துறை 17 கல்முனைவடக்கு 14 திருக்கோவில் 15 நிந்தவுர் 13 காரைதீவு 13 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
பிராந்தியத்தில் 10க்கு குறைந்த எண்ணிக்கையுடைய ஒரேயொரு சுகாதாரப்பிரிவு நாவிதன்வெளிப்பிரிவு .அங்கு இதுவரை ஆக 07தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர்.
 
 
கல்முனை மாநகரில் 237..
அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 2367 தொற்றுக்களாக  அதிகரித்திருக்கிறது.
 
கல்முனை தெற்கில் 186பேரும் சாய்ந்தமருதில் 37பேரும் கல்முனை வடக்கில் 14பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனைக்குடியை மையமாகக் கொண்ட கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக இவ்விதம் 186 ஆக உயர்ந்துள்ளமையால் அங்கு முடக்கச்செயற்பாடு 5வது நாளாக அமுலில்உள்ளது.
 
மட்டக்களப்பில் 208…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை   208ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 69 பேரும் கோறளைப்பற்றில் 61 பேரும் களுவாஞ்சிக்குடியில் 23பேரும் ஏறாவூரில் 15 பேரும் மட்டக்களப்பில் 12பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.
 
திருமலையில் 134...
திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை   134ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 64பேரும் மூதூரில் 41பேரும் கிண்ணியாவில் 11பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.
 
கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள் 29பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 809பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
36510பேருக்கு பிசிஆர் ..
இதுவரை கிழக்கில்     36510பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள்.
கல்முனைப்பிராந்தியத்தில் 19258 சோதனைகளும் மட்டக்களப்பில் 9838 சோதனைகளும் அம்பாறையில் 2816 சோதனைகளும் திருகோணமலையில் 4598 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
 
08சிகிச்சை நிலையங்களில் 2487 அனுமதி
 
கிழக்கில் இதுவரை 06கொரோனா சிகிச்சை நிலையங்கள் இருந்துவந்தன.  புதிதாக மட்டுமாவட்டத்தில் பெரியகல்லாறு மற்றும் திருமi மாவட்டத்தில் குச்சவெளியிலும் இரு வைத்தியசாலைகள் சிகிச்சை நியைங்களாக மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் கிழக்கில் 08 கொரோனா சிகிச்சை நிலையங்களாகியுள்ளது.
 
கிழக்கிலுள்ள 08 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 496கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (01.01.2021) வெள்ளிக்கிழமை  வரை 2487பேர் மேற்படி 8 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1980பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.11பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
 
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 807பேர் அனுமதிக்கப்பட்டு 678பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 125பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 05 கட்டில் தேவையாகவுள்ளன.
 
மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 35 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 109 பேரும் பதியத்தலாவ சிகிச்சை  நிலையத்தில்  61பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 75 பேரும் மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 67 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டபெரியகல்லாறு சிகிச்சை நிலையத்தில் 13பேரும் குச்சவெளி சிகிச்சை நிலையத்தில் 3பேரும்  சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related posts