முடக்கப்பட்ட கல்முனை மக்களுக்கு உலருணவு !தேரர் உறுப்பினர் அரசஅதிபர் சந்திப்பையடுத்து நடவடிக்கை!

கடந்த ஜந்து(5) நாட்களாக முடக்கப்பட்ட கல்முனை மக்களுக்கான உலருணவை வழங்க அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைவாக இருவாரங்களுக்குத் தேவையான 10ஆயிரம் ருபா பெறுமதியான  உலருணவுப்பொதியை இருகட்டங்களில் பிரதேசசெயலகமூடாக விரைவாக  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் நேற்று(1) வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட அரசாங்கஅதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கமைய விரைவாக அவை வழங்கப்படவிருக்கிறது.
 
கல்முனை முடக்கப்பட்டு 5 நாட்களாகியும் அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பகுதிக்குள் உள்ள ஏழைமக்கள் உண்ணஉணவின்றி பட்டினியால் வாடஆரம்பித்துள்ளனர்.
 
இது விடயத்தை அம்பாறை அரச அதிபரிடம் குறித்த தேரரும் உறுப்பினரும் எடுத்துக்கூறினர். கொழும்பிலிருந்து அதற்கான உத்தரவு கிடைத்ததும் உடனடியாக உலருணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
 
நேற்று   இப்பிரதேசம் இராணுவத்தளபதியால் தணிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக உத்தியோகபூர்வமாக அறிவிக்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts