தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டுடன் இணைந்ததாக காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தி சிநேகபூர்வ கடின பந்து கிறிக்கட் விளையாட்டு போட்டியை நேற்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் நடாத்தியது.
காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழக அணிக்கும் அம்பாறை சத்தாதிஸ்ஸ விளையாட்டு கழக அணிக்கும் இடையில் இப்போட்டி இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காரைதீவு விவேகானந்தா வி.கழகம் 20ஓவர்களில் 08 விக்கட்டுகளை இழந்து 190ஓட்டங்களை எடுத்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அம்பாறை சத்தாதிஸ்ஸ அணி 20ஓவர்களில் 7விக்கட்டுகளை இழந்து 160ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அதன்படி 30ஓட்டங்களால் விவேகானந்தா அணி வெற்றிவாகை சூடியது.
விவேகாநந்தா அணியின் வீரர் எஸ்.டெனிஸ்ரன் 62ஓட்டங்களைப்பெற்று போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதைத் தட்டிச்சென்றார்.
பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக்ராஜபக்ச கலந்துசிறப்பித்தார்.கௌரவ அதிதிகளாக தவிசாளர் கே. ஜெயசிறில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கழகச் செயலாளர் விளையாட்டுத்துறை ஆசிரியர் ஜெ.சோபிதாஸ் நன்றியுரைநிகழ்த்தினார்.