மட்டக்களப்பு பெரிய புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிரான ஐப்பசி 4ம் திகதி மட்டக்களப்பு கோட்டை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணவாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பெரிய புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிரான ஐப்பசி மாதம் 4ம் திகதி மட்டக்களப்பு கோட்டை வாசல் முற்றுகை போராட்டம் ஒன்றினை தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த செப்டம்பர் 29ம் திகதி மட்டக்களப்பு திருகோணமலை வீதியினூடாக பயணித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பிரதி அமைச்சர் இரா.அங்கஜன் உட்ப்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பயணித் வாகன தொடரணியை வழிமறைத்த தமிழ் உணர்வாளர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் மஹிந்த அமரவீர தான் கொழும்பு சென்று ஜனாதிபதியை சந்தித்து இவ் விடயம் சார்பாக உரிய தீர்வை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.
அதன் பின்னர் ஒக்டோபர் 01ம் திகதி தமிழ் உணர்வாளர்களிடம் தொடர்பினை ஏற்ப்படுத்திய அமைச்சர் தனக்கு இரண்டு ஒரு நாள் கால அவகாசம் வழங்கும் படியும் கேட்டுக் கொண்டதிற்கிணங்க போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ் உணர்வாளர்களின் தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்துடன் ஒக்டோபர் 1ம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகல்லாகம அவர்களிடம் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிரான மகஜர் ஒன்றினை ஆளுனரிடம் கையளிக்கப்பட்டது.அத்துடன் ஒக்டோபர் 2ம் திகதி கிழக்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அவர்களை சந்தித்த தமிழ் உணர்வாளர்களின் தலைவர் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விவகாரம் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஆத்திர தன்மையை ஏற்ப்படுத்தி வருவதாகவும் எதிர்காலத்தில் இரு இனங்களுக்கிடையிலான ஒரு முறுகள் நிலையை ஏற்ப்படுத்தும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு எழுத்து மூலமான மகஜரை சமர்ப்பித்தார்.