பெண்களுக்கான உரிமை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை 86 வது இடத்தில் உள்ளது என்கின்றார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பாதிப்புற்ற பெண்கள் அமைப்பின் ஏற்பாடு செய்திருந்த பெண்களும் அவர்களது போராட்டமும் எனும் தொனிப்பொருளில் அக்கறைப்பற்று கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அநிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில்
இன்று நாம் சர்வதேச மகளீர் தினத்தை மிக எழுர்ச்சியாக கொண்டாடிக்கொண்டுள்ளோம் அந்தவகையில் பெண்களின் சமத்துவம் உரிமை என்பன நாம் மதிக்க வேண்டும் அத்துடன் பெண்களின் மூலமாக பல மாற்றங்களை கொண்டுவர முடியும் 1800 களில் ஏற்பட்ட பெண்ணடிமை ஒடுக்குமுறையின் பேரிலேயே பெண்களுக்கான சர்வதேச மகளீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் பெண்கள் மூலமாக பல நாடுகளில் அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன அந்தவகையில் இலங்கையிலும் அவ்வாறான அரசியல் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் பெண்கள் அவர்களது உரிமைகளுக்காக பிறப்பிலிருந்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.
பொதுவாக பார்த்தால் பெண்களுக்கு அரசியலில் 25 % உரிமைகள் கொடுக்கப்படவேண்டும் ஆனால் இவ்வருடம் நடைபெற்ற தேர்தலில் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. பெண்களின் துணிவையும் தைரியத்தையும் நாம் மிக கௌரவமாக பார்க்கப்பட வேண்டும் காரணம் பல போராட்டங்கள் மத்தியில் பாடுபட்டு அவர்கள் வெற்றிபெருகின்றனர் ஆகையினால் நாம் இந்த சர்வதேச நிகங்களின் பெண்களை மதித்து நடக்க நாம் முன்வரவேண்டும் என இவ்விடத்தில் கூரிக்கொள்ள விரும்புகிறேன் என அவர் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.