அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் கிறீஸ் பூதத்தின் அச்சுறுத்தல் காரணமாக பெண்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
இரவில் சுற்றி திரியும் புதிய கிரீஸ் பூதம் தொடர்பில் மற்றுமொரு தகவல் வெளியாகி உள்ளது.
வாதுவ, பொஹந்தரமுல்ல, பொத்துபிட்டிய, கம்மனயாவத்தை மற்றும் கொலபத ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கிரீஸ் பூதம் தொடர்பில், மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கறுப்பு கட்டை காற்சட்டை மாத்திரம் அணிந்து இரவு நேரத்தில் வீடுகளுக்கு சென்று அங்குள்ள பெண்கள் மற்றும் இளம் பெண்களைக் கட்டிப்பிடித்து கொள்ளும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் பொலிஸ் பரிசோதகர் தம்பதியினர் வசிக்கும் வீட்டிற்கு சென்று அந்த வீட்டில் இருந்த பெண்ணின் காலை பிடித்து இழுக்கும் போது அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். பேய் என கூறி வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளதாக வீட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், உரிய நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.