பெரியகல்லாறு வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் பிரதேசத்தில் வீசிய மினிச்சூறாவளி காற்றில் அகப்பட்டு காணவில்லை.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பாலத்தின் அருகாமையில்(ஓடையில்) வலை வீசிக்கொண்டிருந்த மீனவரை ஞாயிற்றுக்கிழமை(17.6.2018) வீசிய மினி சூறாவளி காற்று இழுத்துச் சென்று ஆழமான வாவிக்குள் வீசப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பிரதேசத்தில் கடுமையான இரைச்சலுடன் மினிச்சுறாவளி சுமார் 25 நிமிடம் வீசியது.கோட்டைக்கல்லாறு 2ச் சேர்ந்த கந்தசாமி-ராஜகுமார்(சின்னவன்-வய
இவர் காணாமல் போய்யுள்ள விடயமாக பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் ஆழ்ந்த கவலையுடன் காணப்படுகின்றனர்.இவரை தேடும் பணியில் களுவாஞ்சிகுடி பொலிசார், ஏனைய மீனவர்கள் இணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை பெரியகல்லாற்றில் மின்னல் அடித்து பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின் கூரைப்பகுதி கருகிப்போய் சேதமடைந்துள்ளது.வீட்டின் கூரையின் ஓடுகள்,கைமரங்கள் சேதமேற்பட்டுள்ளது.துறைநீலாவணை 5ம் வட்டாரத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் வளவுக்குள் உள்ள தென்னை மரத்தில் மின்னல் அடித்து தென்னைமரம் கருகிப்போயுள்ளது.இக்கிராமத்தில்