ஆசிரியர் ராஜதுரை அவர்கள் தனது 36 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு

மட்டக்களப்பு கல்விவலயத்திற்குட்பட்ட குடியிருப்பு கலைமகள் மகாவித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர் நாகலிங்கம் ராஜதுரை அவர்கள் தனது 36 வருட கல்விச் சேவையில் இருந்து 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றுள்ளார்.

இவர் மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்புக் கிராமத்தில் நாகலிங்கம் சுந்தரம்மா தம்பதியினருக்கு மகனாக 1962.10.26 அன்று பிறந்தார் இவர் தனது ஆரம்பக் கல்வியை குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் கற்றதுடன் உயர்தரத்தினையும் அதே பாடசாலையில்கற்று ஆசிரியராக 1990.03.23 ஆம் திகதி மட்டக்களப்பு புல்லுமலை றோமன் கத்தோலிக்கத் தமிழ் வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று பின்னர் குடியிருப்பு கலைமகள்வித்தியாலயம் மட்டக்களப்பு ஐயங்கேணி தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றில் கற்பித்து இறுதியாக மீண்டும் குடியிருப்பு கலைமகள் மகாவித்தியாலயத்தில்; நியமிக்கப்பட்டு சேவையாற்றியநிலையில் ஓய்வுபெறுகின்றார். அவர் கற்பித்த பாடசாலைகளில்   பதில் அதிபர் மற்றும் பிரதி அதிபர் உட்பட பல பொறுப்புக்களில் இருந்ததுடன் தனது மாந்திரியத் தொழில் மூலம் பெறப்படும் வருமானத்தினை  ஏழை மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கு உதவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது

 

Related posts