சா.நடனசபேசன்
தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பெரியநீலாவணை தொடர் மாடியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மட்டக்களப்பு வட்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் வட்ஸ் அமைப்பின் நிதி உதவி மூலம் 600 பேருக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு 16 ஆம் திகதி புதன்கிழமை வட்ஸ் அமைப்பின் பெரியநீலாவணைக்கான இணைப்பாளர் திருமதி பிரியதர்ஷினி நரேஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அங்குவசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1250 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டதுடன் மொத்தமாக 7 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியுடைய உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இப்பொதிகளை அம்பாரை மாவட்ட மேலதிக அரச அதிபர் ஜெகதீசன் கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேசசெயலாளர் அதீசயராஜ் அபிவிருத்தி உத்தியயோகத்தர் தர்மலிங்கம் மற்றும் அப்பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர் கேதீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ் வட்ஸ் அமைப்பானது பெரியநீலாவணைத் தொடர்மாடியிலும் அதனை அண்டிய பகுதிகளில் கல்விகற்கும் மாணவர்களின் நன்மை கருதி 2018 ஆம் ஆண்டில் இருந்து தரம் 1 இல் இருந்து 11 வரையிலான மாணவர்களுக்கு இலவச வகுப்புக்களை தனியான கல்வி நிலையம் ஒன்றினை நிறுவி நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதே வேளை உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யும் நோக்குடன் உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் உற்பத்திசெய்யப்பட்ட பொருட்களையும் இவ் அமைப்பு கொள்வனவுசெய்து பொதுமக்களுக்கு வழங்கிவைத்தமை விஷேடம்சாமாகும்
அதேவேளை கடந்த ஆண்டு இவ்வாறு நாடு முற்றாக முடக்கப்பட்டிருந்த காலங்களில் இத்தொடர்மாடியில் வசித்துவரும் மக்களுக்கு உலர் உணவுப்பொதியினைவழங்கிவைத்து மக்களின் நலனோம்பும் செயற்பாட்டினை மட்டக்களப்பு வட்ஸ் அமைப்பின் நிருவாகத்தின் மூலம் லண்டன் வட்ஸ அமைப்பு செய்துள்ளமை அனைத்து தரப்பினர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்துவருகின்றன. அதேவேளை இவ்வாறான உதவிகளை செய்து இக்காட்டன சூழலில் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கின்ற வட்ஸ் அமைப்புக்கு அப்பிரதேச மக்கள் நன்றிகளைத்தெரிவித்துள்ளனர்