பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட இரு பீ.சீ.ஆர் கருவிகள் உள்ளிட்ட 25 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

கொவிட் சவாலை வெற்றி கொள்ளும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் மக்கள் வங்கியுடன் இணைந்த பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவன குழுமத்தினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்ட இரு பீ.சீ.ஆர் கருவிகள் உள்ளிட்ட 25 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் இன்று (16) அலரி மாளிகையில் வைத்து வைத்தியசாலைகளுக்கு கையளிக்கப்பட்டன.
 
பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவன குழுமம் 2021 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஈட்டிய இலாபத்தின் ஒரு பங்கை இப்பணிக்காக ஒதுக்கியுள்ளது.
 
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய குறித்த உபகரணங்களுக்கான தேவையுள்ள வைத்தியசாலைகள் சிலவற்றுக்கு இவ்வாறு பீ.சீ.ஆர். கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கௌரவ பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது.
 
குறித்த நிகழ்வில்சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, தலைமை நிர்வாக அதிகாரி.சாமிந்த மர்ஸிலின் மற்றும் வைத்தியசாலை வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts