பேராதனை பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டிருந்த 4 பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
முகாமைத்துவ பீடம், கலைப்பீடம், ஒன்றிணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீடம் மற்றும் கால்நடை வைத்திய பீடத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகள் இன்று திறக்கப்படவுள்ளன.
எனினும், பீடாதிபதிகளின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 27 ஆம் திகதி பொறியியல் பீடம் திறக்கப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மருத்துவ பீடம், பல்வைத்திய பீடம், விவசாய பீடம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகின.
பொறியியல் பீடத்தின் மாணவர்கள் 80 வீத வருகையை பூர்த்தி செய்யாததால், பரீட்சைக்கு தோற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.