கிழக்கு மாகாணத்தில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து எதிர்வரும் தேர்தலில் பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவது தொடர்பிலாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் (புதன்கிழமை) மட்டக்களப்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்ததாக, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் கலந்துக் கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதன்போது, புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை தயார் செய்வதற்கும் தீர்மானமானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தயார் செய்யப்படும் உடன்படிக்கையை, அனைத்துக் கட்சிகளும் பரிசீலித்து தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த உடன்படிக்கை தயார் செய்யப்பட்டதன் பின்னரே இதுதொடர்பிலான இறுதி தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.