மட்டக்களப்பில் ஜனாதிபதி சவால் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 67 ஆவது பிறந்த முன்னிட்டு மட்டக்களப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இளைஞர் முன்னணியின் ஒழுங்கமைப்பில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி(ஜனாதிபதி சவால் கிண்ணம்) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் வி.எஸ்.சுஜாந் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் ஜனாதிபதி சவால் கிண்ணக்  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் (31.8.2018)31ம் திகதி முதல் நடைபெற இருக்கின்றது.இவ் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 24 உதைபந்தாட்ட அணியினர்கள் பங்குபற்றுகின்றனர்.

ஜனாதிபதி சவால் கிண்ண உதைபந்தாட்டியானது மட்டக்களப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்னணி தலைவருமான வி.எஸ்.சுஜாந் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் பியசேன கமகே, விளையாட்டுத்துறை இராஜங்க அமைச்சர் சிறியாணி விஜயவிக்கிரம,நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புலாஹ், ஸ்ரீலாங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் சாந்தா பண்டார,செயலாளர் எரிக் பிரசன்ன வீரவத்தன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள்,முப்படை அதிகாரிகள்,கலந்து கொள்ளவுள்ளார்கள்.

Related posts