போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பெயர் பலகை,பூங்கா,பொதுமக்கள் காத்திருக்கும் மண்டபம் திறந்து வைப்பு.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று(05.02.20201)  பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அம்மணி அவர்களின் தலமையிலும் வழிநடத்தலிலும் பிரதேச செயலகத்தின்  பெயர் பலகையினை மக்களின் பார்வைக்காக திறந்து வைத்தல், மற்றும் மின் விளக்குகளை ஒளியூட்டும் நிகழ்வு மற்றும் பிரதேச செயலக பூங்கா  மற்றும் பொதுமக்கள் காத்திருக்கும் அறையும் திறந்து வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் திரு.க.கருணாகரன் அவர்களும், பிரதம கணக்காளர் திரு.க. ஜெகதீஸ்வரன் மற்றும் பிரதம பொறியியலாளர் திரு.தெ.சுமன் அவர்களும்      மற்றும் சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந் நிகழ்வு சிறப்புறுவதற்கு பெரும் பாங்காற்றிய பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திரு.சி.புவனேந்திரன் அவர்களும், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.சசிகுமார் மற்றும் கணக்காளர் திரு த.அம்பிகாவதி அவர்களும் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு. த.உமாபதி மற்றும் பிரதேச செயலகத்தின் அர்ப்பணிப்பான உத்தியோகத்தர்கள் அனைவரினதும் பங்களிப்புடன்  பி.ப 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது.
 
வெல்லாவெளிப் பிரதேச செயலகமானது 43 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.அந்தவகையில் கடந்த காலங்களைவிட பிரதேச அபிவிருத்தி, பிரதேசசெயலக நிர்வாகக்கட்டமைப்பு மற்றும் பிரதேசசெயலக அபிவிருத்தி முதலிய முக்கியவிடயங்களில் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்கள் மிகவும் சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts