மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 30 இலட்சம் பெறுமதியான வனப் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட வன அதிகாரி டபிள்யூ.எம்.எச். விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, பெரியபுல்லுமலை மற்றும் வாழைச்சேனை ஆகிய வன வட்டார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது இந்தக் குற்றச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு வன வட்டாரப் பிரிவில் 18 குற்றங்களில் 13 சந்தேகநபர்களும், பெரியபுல்லுமலை வன வட்டாரப் பிரிவில் 18 குற்றங்களில் 3 சந்தேகநபர்களும், வாழைச்சேனை வன வட்டாரப் பிரிவில் 9 குற்றங்களில் 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களுக்கு நீதிமன்;றம் 2 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளதாகவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.