அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம்

எதிர்வரும் 2018.08.30 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின கவண ஈர்ப்பு போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றார்.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின கவண ஈர்ப்பு போராட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையில்
இம்முறை ‘காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம்’ என்ற தொனிப்பொருளில் இது தொடர்பிலான நிகழ்வுகள் சர்வதேச ரீதியில் நடைபெறவுள்ளது ஆனால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் யுத்தம் முடிவடைந்து இவ்வளவு காலமாகவும் அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை.
அதுமட்டுமின்றி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருக்கின்ற காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் போலியான முறையிலேயே நடைபெறுகின்றன அந்தவகையில் நாம் அவ்வலுவலகத்தை முற்றுமுழுவதாக புறக்கணிக்கின்றோம்.
அத்துடன் எதிர்வரும் 2018.08.30 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் மத்திய கல்லூரிக்கு முன்னால்     நடைபெறவிருக்கும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின கவண ஈர்ப்பு போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் சிவில் சமூகத்தின் செயற்பாட்டாளர்கள் அனைவரையும்      ஒன்றிணையுமாறு எமது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் அழைப்புவிடுக்கின்றோம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts