சிறுக்கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு எற்படும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுக்கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூவரஞ்சினி முகுந்தன் தலைமையில் (27.09.2019) நடைபெற்றது. இங்கு பாவனையாளர் தொடர்பான சட்டதிட்டங்கள் ,நியமங்கள் ,பிரச்சனைகள் ,உரிமைகள் ,பொறுப்புக்கள்,கடமைகள் தொடர்பாக அறிவூட்டல்களை நுகர்வோர் அதிகார சபை கிழக்கு மகாண இணைப்பாளர் சு.கு அன்வர் சதாத் விரிவாக விபரித்தார். இதில் வியாபாரிகள் தரமான பொருட்களை நியாயமான விலையில் நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்பதையும் எதிர்காலத்தில் உணவகங்களுக்கு உணவின் தரத்தினை மேம்படுத்துவதற்காக நல்ல உற்பத்தி நடைமுறை உத்தரவாத சான்றுதல் வழங்கப்படும் என தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித்திணைக்கள உதவி ஆணையாளர் மு.தனரூபன் வருமான வரி செலுத்தவேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் செலுத்துவதனால் நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் கருத்துரை வழங்கினார். இக்கூட்டத்திற்கு உள்நாட்டு இறைவரித்திணைக்கள உதவி ஆணையாளர்கள் கே.தனரூபன், எம்.சீ அன்வர், மாவட்ட இணைப்பாளர் திருமதி. கீதா சுதாகரன் ,தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அரச திணைக்கள தலைவர்கள் சிறுக்கைத்தொழில் முயற்சியாளர்கள்,பாவனையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...