சுவிஸ் உதயத்தின் பொதுக்கூட்டமும் நிருவாகசபைத் தெரிவும்;

சுவிஸ் உதயம் அமைப்பின் பொதுக்கூட்டமும் நிருவாகசபைத்  தெரிவும்  இன்று 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளை அலுவலகத்தில் சுவிஸ் உதயத்தின் சுவிஸ்நாட்டின் பொருளாளர் தொழிலதிபர் க.துரைநாயகத்தின் வழிகாட்டலில் சுவிஸ்  உதயத்தின் கிழக்குமாகாணத் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பானது 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கபட்ட மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றது. இவ் அமைப்பின் பொதுக் கூட்டமும் புதிய நிருவாகசபைத் தெரிவும் விரைவில் நடாத்தப்பட வேண்டும் என சுவிஸ் நாட்டில் இயங்கும் சுவிஸ் உதயம்  அமைப்பின் தலைவர் டி.எல்.சுதர்சன் செயலாளர் வே. ஜெயக்குமார் மற்றும் நிருவாக உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இக் கூட்டம் இன்று இடம்பெற்றது.

இதில் தலைவராக ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் செயலாளராக அதிபரும் கவிஞருமான ஆ.புட்கரன் பொருளாளராக பாவாணர் அக்கரைப்பாக்கியன் உப தலைவராக உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் உப செயலாளராக ஓய்வுநிலை பிரதி அதிபர் க.குபேந்திரன்  ஆகியோர்களுடன் ஆலோசனை சபை உறுப்பினர்களாக ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர்  எம்.உலககேஸ்வரன் துறைமுக அதிகாரசபை முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.நாகேந்திரன் ஓய்வு நிலை அதிபர்  ரி.விவேகானந்தம், ஆசிரியர் ஐ.ஜீவராஜ் ரி.பாலசுப்பிரமணியம் ஜே.கல்யாணி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன். சுவிஸ் உதயத்தினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் எதிர்கால உதவித்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

 

Related posts