மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு  புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை   தலைமையில்  பங்குதந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளாருடன் அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புகொடுத்தனர்.
 
ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு கடந்த  6 ஆம் திகதி  பங்குதந்தை ஜோர்ஜ் ஜீவராஜ்  தலைமையில்  கொடியேற்றத்துடன்  சுகாதார நடைமுறையின் கீழ்  மட்டுப்படுத்தப்பட்ட பங்கு மக்களுடன்  நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
 
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை   தலைமையில்  ஒப்புக்கொடுக்கப்பட்ட  திருவிழா  கூட்டுத்திருப்பலியினைத் தொடர்ந்து அன்னையின் திருச்சிருவ  விசேட  ஆசீருடன்  கொடியிறக்கப்பட்டு  ஆலய திருவிழா நிறைவுபெற்றது.
 
இதேவேளை  அன்னை  மரியாளின் விண்ணேற்பு  விழாவினை சிறப்பிக்கும் வகையில் மறை மாவட்ட ஆயருக்கு பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்  தற்போது மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ்  தொற்று  பரவல்  காரணமாக திருவிழாவினை சுகாதார நடைமுறையின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட பங்கு மக்களுடன்  வழிபாடுகளை நடாத்துவதற்கு  ஒத்துழைப்புக்களை  வழங்கிய வட்டார தலைவர்களை கௌரவிக்கும் வகையில்  ஆயரினால்  நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts