மட்டக்களப்பு மாநகரசபையின் 01வது விசேட அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது.
இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், உதவி ஆணையாளர், மாநகரசபைச் செயலாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அதிகார கையளிப்பு தொடர்பாக நிதிக்குழுவின் சிபார்சுகள் இன்றைய கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு சபை உறுப்பினர்களின் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டன .
மாநகர சபையின் நியதிச் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நிதிச் செயற்பாடுகள் தொடர்பில் மாநகர சபை நிதிக் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்களை மாநகர ஆணையாளருக்கு பகிர்ந்தளிப்பதற்காக சபையின் அனுமதி கோரும் முகமாக இன்றைய இந்த விசேட அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது வீதியோர வியாபார செயற்பாடுகளை கண்காணித்தல், மற்றும் வரி அறிவிடுவதற்காக GPS தொழில்நுட்பத் திட்டம் நடைமுறைப்படுத்துதல், தேவைக்கேற்ப 100,000.00 வரையான செலவீனங்களை மேற்கொள்வதற்காக மாநகர ஆணையாளருக்கு அனுமதி வழங்குதல் மற்றும் ஐNசுஐஆ நிறுவனத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட புதிய திண்மக் கழிவகற்றல் செயற்திட்டத்திற்கான அனுமதி வழங்குதல் போன்றன தொடர்பில் சபையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியும் பெறப்பட்டன.
நிலையியல் குழுக்களான சுகாதாரம் , நிதி, வேலை , வாசிகசாலை குழுக்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்களை மாநகர முதல் இன்று வெளிப்படுத்தினார் . அத்தோடு மாநகர சபையின் முதல்வரின் சிபார்சுக்கு இணங்க அனர்த்த முன்னாயர்த்த குழு காணிக்குழு, விளையாட்டு குழு கலை கலாசார குழுக்களும் அமைக்கப்பட்டன