மட்டக்களப்பு மாநகர சபையின் 5 ஆவது அமர்வு (22) முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
நிதிக் குழு, சுகாதாரக் குழு, வேலைகள் மற்றும் அபிவிருத்திக் குழு, நூலகம் மற்றும் மக்கள் பயன்பாட்டுக் குழு ஆகிய 4 நிலையியற் குழுக்களுக்கான விதிமுறைகள், கடமைப் பரப்புக்கள் பற்றி முதல்வர் விளக்கமளித்தார்.
மட்டக்களப்பு மாநகரத்தில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் முகமாக மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனால் கொண்டு வரப்பட்ட நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தானியங்கு சமிஞ்ஞைகள் விளக்குகள் நிறுவுதல் மற்றும் மாநகர சபை முகங்கொடுக்கும் கழிவு முகாமைத்துவ சவாலைக் ஓரளவு குறைப்பதற்காக பிளாஸ்டிக் போத்தல்களை கொறண பெய்ரா கம்பனிக்கு விற்பனை செய்வதற்கான உடன் படிக்கையில் மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல் போன்ற பிரேரணைகளைக் கொண்டு வந்த போது அவைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அத்தோடு மாநகர சபை உறுப்பினர் க. காந்தராஜாவால் கொண்டு வரப்பட்ட அடைக்கப்பட்ட விதிகளை திறக்க நடவடிக்கை எடுத்தல் பிரேரணையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாநகர சபை உறுப்பினர்களான மா.சண்முகலிங்கம், ஜேம்ஸ் நவரட்ணராஜா மற்றும் சூசைமுத்து கிளனி வசந்தகுமார் ஆகியோரும் உரையாற்றினர்.
கடந்த 14.06.218 அன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த 5 ஆவது அமர்வு ஒத்திவைக்கப்பட்டு நேற்று (22) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.