மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 207 ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 207 ஆவது ஆண்டு தினம் இன்று செவ்வாய்கிழமை (29)காலை 10.00 மணியளவில் கல்லூரியின் முதல்வர் இராசதுரை-பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தி கல்லூரியானது வில்லியம் அடிகளாரின் ஆசீர்வாதத்தால் 1814 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இன்றுடன் 206ஆண்டுகளை பூர்த்தி செய்யப்பட்டு கல்லூரி 207ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கின்றது என்றால் அடிகளாரின் தூய,தூரநோக்குடைய எண்ணமாகும்.இக்கல்லூரியில் படித்தவர்கள் உயர் பதவியில் அலங்கரிப்பது வில்லியம் ஓல்ட் அடிகளாரின் ஆசீர்வாதம் ஆகும்.மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் அயராத முயற்ச்சியின் பயனாக இக்கல்லூரியின் 207 ஆவது ஆண்டிலே இக்கல்லூரியானது தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமை விஷேட அம்சமாக குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள வில்லியம் ஓல்ட் அடிகளாரின் சிலைக்கு முன்பாக புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்தின் முகாமைக்குரு சாம் சுவேந்திராவின் இறை ஆசீர்வாதப் பிராத்தனையுடன் கொவிட்-19 சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக எளிமையாக இடம்பெற்றது.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஸ்தாபகர் வில்லியம் ஓல்ட் அடிகளாரின் சிலைக்கு கல்லூரியின் அதிபர் இராசதுரை- பாஸ்கர்,பாடசாலையின் அபிவிருத்தி சங்கச் செயலாளர் வை.கோபிநாத் ஆகியோர்கள் மாலை அணிவித்தார்கள்.இந்நிகழ்வில் பழைய மாணவர்சங்கத்தின் தலைவர் எபநேசர் தர்ஷன் விஜயரெத்தினம்,பகுதித்தலைவர்கள்