சுமுகமாகக் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதனை முறியடிக்கவே, திட்டமிட்டு என்னை அச்சுறுத்துகிறார்கள். பொலிஸ் நிலையத்தில் தனக்கு நேருகின்ற அச்சுறுத்தல்களுக்கெதிராக முறைப்பாடு செய்யப்பட்டு, அது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் அவர்கள்; தெருவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் அவர்கள் தனது தொழிற்சங்க செயற்பாடுகள் காரணமாக முகப்புத்தக (Facebook)வாயிலாகத் தனக்குப் பல அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும், அத்தோடு குறித்த ஒரு நபரால்; முகப்புத்தகப் பதிவுகள் வாயிலாக கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுவெளியில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகச்செயலாளர் மதி குமாரதுரை மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் உதயருபனிடம் தனிப்பட்ட விடயங்களை அரசியலிற்குள் புகுத்திப் பிரிவினையை உண்டாக்கவேண்டாமெனவும், இது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு எனவும் தெருவித்திருந்தார்.
இந்த விடயம் குறித்து உதயருபன் அவர்களிடம் வினவியபோது, தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் அவர்கள்; தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெருவித்துள்ளதாவது, ‘பல வருடங்களாக கல்வி தொடர்பான நடவடிக்கைகளோடு பயணித்துக்கொண்டிருக்கும் எனக்கு அரசியல் தொடர்பான பிரச்சனைகளையோ, பிரிவினைகiயோ ஏற்படுத்தவேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. பிரதேசவாதம் ஏற்படுவதற்கு வழிவகுப்பது போன்ற முகப்புத்தகப் பதிவையம் என்னை நோக்கிப் பயன்படுத்தியுள்ளார்கள். வட கிழக்கு சமூகப் பொருளாதாரக் கலாச்சாரத்தின் மீது சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கி;ற ஒரு சங்கமாகவே எமது ஆசிரியர் சங்கம் செயற்பட்டு வருகின்றது. சுயநிர்ணயம் என்றால் என்பது தொடர்பாக அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பெரும்பான்மை இனத்தவர்களோடு சேர்ந்து சுமுகமாக கல்விச் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துவருகின்றபோது இதை முறியடிக்கவேண்டுமென்று திட்டமிடப்பட்டு முகப்புத்தகம் எனும் சமூகவலைத்தமூடாக எனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது சிறந்த செயற்பாடு அல்ல. கல்வி தொடர்பான செயற்பாடுகளைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முனையும் செயற்பாடாகவும் அமையலாம்.
பகிரங்கமான விவாதமொன்றிற்கு நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரை அழைத்திருக்கின்;றேன்.
இவ்வாறு கல்விச் செயற்பாடுகளிற்கு முட்டுக்கட்டையாக செயற்பட முனைவோர் குறித்து வெகுவிரைவில் பாராளுமன்றத்திலும் குரல்கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இவ்வ்றான செயற்பாடுகளை நான் முற்றிலும் நிராகரிக்கின்றேன்’ எனவும் மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் உதயரூபன் அவர்கள் தெருவித்திருந்தார்.