மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால ஊரடங்கால் மட்டு.மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது.
இ.கி.மிசன் கல்லடி ஆச்சிரம உதவி மேலாளர் சுவாமி நீலமாதவானந்த ஜீ இந்நிவாரணப்பணியை ஒருங்கிணைத்து வழங்கிவைத்தார்.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பிலும் மன்னாரிலும் ஏறக்குறைய 7.5 லட்சம் ரூபாய் செலவில் 500 குடும்பங்களை சார்ந்த 2500க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்தப் பணிகள் நடைபெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயித்தியமலை ,நெல்லி காடு பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு தலா 1500 மதிப்புள்ள அரிசி ,கோதுமை, சீனி ,பருப்பு ,கடலை, சோயா, சம போச போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான நிதியை கனடாவில் இருந்து சர்வதேச மருத்துவ அமைப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது (( International Medical Health Organisation of Canada)