மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மாணவர்களின் கல்வி தரத்தினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாநகர எல்லைக்குள் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லுரி மாணவர்களும் இவ்வாறான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான ம.ரூபாகரன், அ.கிருரஜன், வி.பூபாலராஜா ஆகியோருடன் மாநகர சழுக மேம்பாட்டு உத்தியோகத்தர் சந்திரகுமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வருகை தந்திருந்த அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.