வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தையொட்டி காரைதீலிருந்து
(7) சனிக்கிழமை மண்டூருக்கு பாதயாத்திரை இடைபெற்றது.
சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காரைதீவு பக்தர்கள் கலந்துகொண்ட இப்பாதயாத்திரையை காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் ஏற்பாடுசெய்திருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து விசேடபூஜையுடன் பாதயாத்திரை ஆரம்பமான
பத்துக்கு மேற்பட்ட அலங்கரிக்கப்ப்ட்ட அலங்கார ஊர்திகள் முன்னேவர பஜனை சகிதம் பக்தர்கள் யாத்திரையில் ஈடுபட்டனர். முதியோர், ஆண், பெண், இளைஞர்யுவதிகள், குழந்தைகள் என பலதிறத்தினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.