மண்ணையும் மக்களையும் காட்டிக்கொடுத்த துரோகிக்கு அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள்.!

மண்ணையும் மக்களையும் காட்டிக்கொடுத்த துரோகிகளுக்கு அம்பாறை மாவட்டத் தமிழ்மக்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள்’
 
இவ்வாறு காரைதீவில்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி செல்வராஜா கணேஸை ஆதரித்து நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் கட்சியின்  மாவட்ட பேச்சாளருமான  கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிட்டார்.
 
அங்கு பேச்சாளர் ஜெயசிறில் மேலும் உரையாற்றியதாவது:
 
வடக்கு கிழக்கை அழித்தவர்களுக்கு அம்பாறையில் தமிழ்பிரதிநிதியை இல்லாமலாக்குவதொன்றும் பெரிதல்ல. அரசின் தயவோடு வாகனங்கள் கட்சிதாவிய எடுபிடிகள் காட்டிக்கொடுத்தபொம்மைகள் என பலதரப்பட்டவர்கள் எலும்புத்துண்டுக்காய் அலைகின்றனர்.
 
திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக இதேஅரசில் வந்த செயலணி உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளன. இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்படும் முன்னரே இங்கு சிவ வழிபாடு இருந்தது என்பதை அவர் அறிவாரா? அரசோடு ஒட்டி உறவாடும் கருணா சிறியாணி புறியாணி திலக் போன்றவர்கள் இதற்கு தீர்வு காண்பார்களா? அந்த தேரருக்கு அவ்வாலயத்தின் பூர்வீகம் தெரியுமா? அதுமட்டுமல்ல கல்முனையிலிருந்து  வழுக்கல்தேங்காய் ஒன்று தமிழன் சைத்தமிழன்னின் பூர்வீகம் பற்றிக்கதைவிடுகிறது. அவர் யார் இதைச்சொல்ல? அதை விடுவோம்.
 
இலங்கையில் குடியேறி சிங்கள இனத்தை தோற்றுவித்த விஜயன் வருகையின் போதே திருக்கோணேச்சரம் உள்ளிட்ட பஞ்ச ஈச்சரங்கள் இங்கு இருந்ததாகவும் அங்கு சென்று விஜயன் வழிபட்டதாகவும் மகாவம்சமே ஒப்புக்கொள்கின்றது.
 
உண்மையில் இலங்கையில் பல பிரசித்தி பெற்ற பௌத்த விகாரைகள் கோயில்களை அழித்தே கட்டப்பட்டன என்ற உண்மை பலருக்குத் தெரியாது.
கண்டரின் கோயிலை அழித்து அபயகிரி விகாரை கட்டப்பட்டது.
மகேசன் கோயிலை அழித்து தூபராம தூபி கட்டப்பட்டது.
தாய் நவரட்னவல்லி அம்மன் கோயிலை அழித்து ருவன்வலிசாய தூபி கட்டப்பட்டது.
இதுபோல இன்னும் பல உள்ளன.அனுராதபுரம் பொலனறுவை கூட ஆலயங்கள் தாது கோபுரங்களாக மாற்றப்பட்டது.
 
சூரனின் கோட்டையையே கதிர்காமம் கிரிவிகாரை .
இவ்வாறு புதைக்கப்பட்ட கோயில்கள் பல உள்ளன. இதனால்தான் இவற்றை பாதுகாக்க குடிக்கின்றனர்.
கோயில் எல்லாம் தொல்லியல் சின்னங்கள். விகாரைகள் பின்தோன்றியவை ஆதலால் அவை தொல்லியல் சின்னங்கள் இல்லை என்பது ஏற்றுக் கொள்ள பட்டுள்ளது….
 
 
த.தே.கூட்டமைப்பில் உபதவிசாளர் என்று அடையாளம் எடுத்தவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக தயாரத்னா என்றும் சிறியாணி என்றும் புறியாணி என்றும் மாறிமாறி தமிழ்மக்களை ஏமாற்றிப்பிழைக்கவருகிறார்கள். சோற்றுக்கு வழியில்லாவிடில் என்னிடம் வாருங்கள் தருகிறேன்.
 
தமிழ் வாக்குகளை மாற்றினத்திற்கு விற்பதற்கு சில தரகர்கள் புறப்பட்டுள்ளனர். காரைதீவை பூர்வீகமாகக்கொள்ளாதவர்களும் பணத்திற்காக கட்சிதாவும் புல்லுருவிகளுமே இவ்ஈனச் செயலில் ஈடுபடுகின்றனர். பாதயாத்திரை நடாத்துகிறார்களாம். படுகேவலமானசெயல்.உடனடியாக அவர்கள் திருந்தவேண்டும். இன்றேல் துரத்தப்படுவார்கள். இது வீரம் செறிந்த வித்தியமண்.
 
இன்று அரசின் ஏஜண்டுகள் சிலர் தொழில்தருகிறோம் அபிவிருத்தி செய்கிறோம் என்றுகூறிக்கொண்டு தமிழ்க்கிராமங்களுள் நுழைகிறார்கள்.காரைதீவுக்குள் 400படிவங்களை வழங்கி கூட்டியும் கொடுத்துள்ளார்கள். இவ்வளவுகாலமும் இல்லாத அக்கறை இன்று அவர்களுக்கு.
 
அதற்கு சில தமிழ்ப்புல்லுருவிகள் துணைபோகின்றார்கள்.சன்மானங்களுக்கான தரகர்கள்.
சிறியாணி என்பவருடன் திரிபவர்கள் பல அபிவிருத்திகளை செய்துதருவதாகவும் தொழில்பெற்றுத்தருவதாகவும் படிவங்கள் விநியோகிக்கிறார்களாம். இவ்வளவு கதைக்கும் அவர் இதுவரை  காரைதீவுக்கு ஒதுக்கியது ஆக 20ஆயிரம் ருபா மட்டுமே. இன்னமுமா இவர்களை நம்புகிறீர்கள்?
 
அவர்களை இனங்கண்டு விரட்டியடிக்கவேண்டும். அவர்கள் தமிழ் விரோதிகள் அல்ல துரோகிகள்.என்றார்
 
கூட்டத்தில் த.தே.கூ. வேட்பாளர்களான செல்வராசா கணேஸ் தவராசா கலையரசன் திருமதி சின்னையா ஜெயராணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 

Related posts