கிளிநொச்சி மாவட்ட முன்னாள் போராளிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட முன்னாள் போராளிகளுக்கிடையிலான கலந்துரையாடல் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் 05 ஆம் திகதி பாரதிபுரத்தில் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில்  நடைபெற்றது.
இதன் போது கட்சியின் எதிர் கால அரசியல் சம்மந்தமாகவும் முன்னாள் போராளி குடும்பங்கள் மற்றும் போரினால் அங்கவீனம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் செயலாளர் ச. குலம் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் க கட்சியின் வடமாகண ஒருங்கிணைப்பாளர் எம். அன்புராஜ் முத்த உறுப்பினர் எஸ். அச்சுதன் மற்றும் ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா 
நாம் எமது அரசியல் பணியில் “மக்களுடன் ஒரு நாள்” என்ற செயற்திட்டத்தின் பிரகாரம் வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் சந்திப்புக்களை ஏற்படுத்தி வருகின்றோம் அந்தவகையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பாடு செய்துள்ளோம் எதிர்வரும் காலங்களில் யாழ் மாவட்டத்தில் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வருகின்றோம்.
முப்பது வருடமாக போராடிய எமது போராளிகளின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நாம் எமது புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் மூலமாக அவர்களது தரவுகளை திரட்டி உதவித்திட்டங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் உள்ளோம். அத்துடன் கட்சியின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நோக்கில் இச்சந்திப்புக்கள் மாவட்டரீதியாக நடாத்திவருகின்றோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் என கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts