மாகாண சபைகள் தேர்தல் குறித்த முக்கிய தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று, எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, இதுத் தொடர்பில், இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கலந்துரையாடல்களும் எவ்வித தீர்மானங்களுமின்றி நிறைவடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.