மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த முடியும் என்று எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தேர்தலை புதிய முறையில் நடத்துவதாக இருந்தால், அதன் அடிப்படையிலான அதிகாரிகளின் பொறுப்புகளை வரையறுத்தல் உள்ளிட்ட விடயங்களை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து வருகிறது.
பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால், அதற்கான வரைவு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருக்கிறது.
இந்தநிலையில் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை பிரதமர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு மேற்கொண்டு வருகிறது.
எனவே ஜனவரியில் தேர்தலை நடத்த முடியும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.