பிரான்சில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஈழத்தமிழர்?

இலங்கையிலிருந்து பிரான்சுக்குள் சென்ற வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிலமணி நேரங்களில் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் அடுத்த சில தினங்களில் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் சில நாட்களுக்கு முன் இடம்பெற்றது.

இந்நிலையில் அவர் ஏன் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டார்? அதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது,

வவுனியாவை சேர்ந்த குறித்த இளைஞர் வெளிநாட்டு முகவர் ஊடாக பிரான்ஸ்சுக்கு சென்ற நிலையில் உறவினரின் வருகைக்காக வீதியில் காத்திருந்தார்.

அந்த நேரத்தில் அவரை இனங்கண்டு விசாரித்த பொலிசார் பிரெஞ்சு மொழியில் பல கேள்விகளை கேட்டுள்ளனர், அதற்கு பதிலளிக்க முடியாமல் அந்த இளைஞர் திணறியுள்ளார்,

மொழி தெரியாத காரணத்தினால் அவரை உடனடியாக ஒரு அலுவலகத்துக்கு அழைத்து சென்று மொழி பெயர்பாளரின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

குறித்த விசாரணையின் போது நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? எதற்காக வந்திர்கள் என்ற பல கேள்விகளுக்கு அவர் முகவர் ஊடாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வந்ததாகவும் விசாரணை பயத்தில் உண்மையை சொல்லியதாகவும், இதன் காரணமாகவே தான் நாடுகடத்தப்பட்டதாக அவரே நேரடியாக எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

Related posts