முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரின் -போராட்டம் பொலிஸார்குவிப்பு

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் செப்டெம்பர் 5 ஆம் திகதியான இன்று நடைபெறவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரின் ஜன பலய போராட்டத்தை முன்னிட்டு இன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான பொலிசார் வரவழைக்கப்பட்டு கொழும்பு நகரின் பல இடங்களில் பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தப்பட்டிருப்பதாக  செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இலட்சக் கணக்கான மக்களை அழைத்துவந்து கொழும்பு நகரை முடக்கப்போவதாக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றும் கனவுடன் கூட்டணி அமைத்து செயற்படும் மஹிந்தவாதிகள் சூளுரைத்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளமு் நிலையில் மஹிந்தவாதிகளே குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் வன்முறைகளை தூண்டிவிடலாம் என்று புலனாய்வுத்துறையினர் அரசாங்கத்திற்கும், பொலிசார் உட்பட பாதுகாப்பு தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்தே பாதுகாப்பிற்காக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

எனினும் ஜனநாயக உரிமைக்கமைய அமைதியான முறையில்இன்று நடத்தவுள்ள போராட்டத்தை முடக்கவே ஆயிரக் கணக்கில் பொலிசாரை தலைநகரின் அனைத்துப் பகுதிகளிலும் குவித்து கண்டனப் பேரணிக்கு வரும் மக்களை அச்சுறுத்த அரசாங்கம் சதிசெய்து வருவதாக மஹிந்தவாதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எவ்வாறாயினும் கொழும்பின் பல பகுதிகளில் குறிப்பாக கொழும்புப் பல்கலைககழக சந்தி, கொள்ளுப்பிட்டி சந்தி, லிபடன் சுற்றுவடடம், விகாரமாதேவி பூங்கா, கொழும்பு கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமானன பொலிசார் குவிக்கப்பட்டு பாதுக்காப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை காண முடிவதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related posts