மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கும் அனைத்து பஸ்களிலும், அடுத்து வருடம் முதல் ஜி.பி.எஸ் தொழிநுட்பம் பொறுத்தப்பட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவையினை முன்னெடுத்துவரும், சொகுசு மற்றும் அரை சொகுசு பஸ்களில், ஜி.பி.எஸ் தொழிநுட்பம் ஏற்கனவே கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக அவ்வாணைக்குழுவின் பொது இயக்குனர், டொக்கடர். டி.எம்.எஸ். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜி.பி.எஸ் தொழிநுட்பம் பொறுத்தப்படாத மாகாணங்களுக்கிடையிலான பஸ்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜி.பி.எஸ் தொழிநுட்பம் பொருத்தப்பட்டப்பின்னர், மாகாணங்களுக்கிடையிலான பஸ்கள் எந்தவழிகளில் பயணிக்கின்றன, எவ்வளவு வேகத்தில் பயணிக்கின்றன என்பது தொடர்பான தகவல்களை கண்காணிக்க முடியுமெனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.