அக்கரைப்பற்று பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த<மாணவியொருவர் மீது பாலியல் சேட்டை புரிந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அக்கரைப்பற்று
பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு மாணவியொருவர் சென்று கொண்டிருந்த வேளையில் அப்பகுதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் குறித்த மாணவியின் ஆடைகளை இழுத்து பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தினை அவதானித்துக் கொண்டிருந்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இக்குற்றச் செயலைத் தடுக்க முற்பட்டபோது
அவ்விளைஞர்கள் இருவரும் குறித்த குடும்பஸ்தரை சரமாரியாகத்
தாக்கியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பண்டாரவின் வழிகாட்டலின்கீழ் பொலிஸ் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீட் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்