சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி பிரதான வீதியில் இன்று (16) மாலை இடம்பெற்ற விபத்தில் வண்டு வீதி உடங்கா 02 சம்மாந்துறையை சேர்ந்த அஸ்ரப் முஹம்மது முனாஸ் (வயது-31) ஸ்தலத்திலையே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வெளிநாடொன்றில் பணிபுரிந்துவிட்டு அண்மையில் நாடுதிரும்பியிருந்த இவரின் மரணம் சம்மாந்துறை மக்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது. இன்று மாலை அஸ்ரப் முஹம்மது முனாஸ் வேலை நிமிர்த்தம் சென்று கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் வாகனத்தை செலுத்தியவர்களின் கவனயீனமே விபத்திற்கான காரணமாக உள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த அஸ்ரப் முஹம்மது முனாஸின் ஜனாஸா (சடலம்) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.