மக்களின் மனங்களில் நீங்காஇடம்பெற்ற  வைத்தியர் கிருஸ்ணகுமார்

 

 
கல்முனைப்பிராந்தியத்தில் பிரசித்திபெற்ற வைத்தியர் டாக்டர் சீனித்தம்பி கிருஸ்ணகுமார் எவரும் எதிர்பாராதவிதமாக 1) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.
 
களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரியாக சேவையாற்றிய டாக்டர் சீனித்தம்பி கிருஸ்ணகுமார் கல்முனை பாண்டிருப்பு மண்ணின் சொத்துக்களில் ஒன்று. நிசாந்தியை கரம்பிடித்த இவருக்கு 3 பிள்ளைகள்.மூவரும்  ஆணபிள்ளைகளார். மூத்த மகன் கொழும்பு மருத்துவபீட மாணவராவார். ஏனையஇருவரும் கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவர்களாவர்.
 
கல்முனைப்பிராந்திய தமிழ்முஸ்லிம் மக்களின் மனங்களில் நீங்காஇடம்பிடித்த டாக்டர் கிருஸ்ணகுமார் தனது 60வது வயதில் காலமானார்.இறுதிநேரத்தில் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் அதிகாலை 3மணியளவில் காலமானார். இறுதியாக இவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்ய மாதிரி எடுக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் இவரது மரணம் மாரடைப்பால்  நிகழ்ந்திருக்கிறது.
 
கல்முனைப்பிராந்தியத்தில் முன்பு டாக்டர் எம்.முருகேசபிள்ளை என்ற வைத்தியர் இவ்விதம் தமிழ்முஸ்லிம் மக்களின் மனங்களில் நீங்காஇடம்பெற்றிருந்தவர். அவரிடம் எப்படிப்பட்ட வியாதியுடன் சென்றாலும் சரியாக இனங்கண்டு குணமாக்கக்கூடிய சக்தி இருந்தது. 
 
அதேபோல் டாக்டர் முருகேசபிளளைக்குப பிறகு இப்பிராந்தியத்தில் மக்கள் மனங்களை கொள்ளைகொண்டவர் இவர். மிகவும் குறைந்த கட்டணத்தில் பிரத்தியேக வைத்தியம் செய்தவர். 
ஏழை வசதியல்லாதவர்களுக்கு இலவசமாகவே வைத்தியம் பார்ப்பது அவரது தனிச்சிறப்பு. மிகவும் சாதுவான மென்குணம் படைத்த இவர் ஒரு ஆன்மீகவாதியும் கூட. இவரது சொந்தச்செலவில் சவளக்கடையில் அவரது வயலுக்கருகில் ஆலயமொன்றை அமைத்துள்ளார்.
 
சமகாலத்தில் வைத்தியர்கள் சுகாதாரத்துறை ஊழியர்களின் வகிபாகம் அளப்பெரியது. குறிப்பாக சுகாதாரவைத்திய அதிகாரிகள் இரவுபகல் பாராது கொரோனா தொற்றாளர்களுடன் பயணிக்கின்றனர்.
 
இவர் மரணிப்பதற்கு முதல்நாள்பகல்கூட களுவாஞ்சிக்குடிப்பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவரைக்கண்காணித்துவிட்டே வந்திருக்கிறார். இறுதியாக  பட்டிப்பளை வெல்லாவெளி சுகதார வைத்திய அதிகாரியாகவிருந்து படுவான்கரைப் பிரதேச பின்தங்கிய கிராமங்களின் சுகதாரத் தேவைகளைக் கவனித்து மேம்படுத்துவதிலும் கர்ப்பிணித் தாய்மார் கிளினிக் நிலையங்களையும் பல விஷேட வைத்திய முகாம்களையும் செயற்படுத்தி மக்களுக்கான மகத்தான சேவைகளையும் வழங்கி சக வைத்தியர்கள்தாதியர்கள்ஊழியர்களோடும் சிறந்த உறவை பேணி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களின் சுகாதாரத் தேவைகளை சிறப்பாகக் கையாண்டவர்.
 
தற்போது கூட வெல்லாவெளி  பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியாகவிருந்து போரைதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள கிராமங்களில் கொரோனா தொற்றை தடுப்பதில் மிகவும் காத்திரமாகப் பணிபுரிந்து மக்களால் நேசிக்கப்பட்ட வைத்தியர்.
மக்கள் நேசித்த மனித நேயம் கொண்ட சிறந்த மனிதரான இவரது இழப்பு  மக்களுக்குப் பே இந்தப் பிரதேச மக்களின் மிகப் பெரும் சொத்து இவர்.
 
மறக்கமுடியாத மருத்துவர்.
 
ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய இந்த மருத்துவரின் இழப்பால் கல்முனை பாண்டிருப்பு மருதமுனை பிரதேசங்கள் இன்று சோகத்தில் ஆழ்ந்து இருக்கின்றன. நேரம் காலம் பாராது மக்களுக்காக உழைத்த ஒரு ஜீவனின் இழப்பு என்றுமே ஈடு செய்ய முடியாதது.
 
கிருஷ்ணா உன்னுடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என அதே பாண்டிருப்பு மண்ணைச்சேர்ந்த முன்னாள் தினகரன் பிரதமபத்திராதபர் சிரேஸ்டஊடகவியலாளர் க.குணராசா அஞ்சலிக்குறிப்பை வெளியிட்டுள்ளார். இவ்வாறு ஏகப்பட்டோர் முகநூல்வாயிலாகவும் நேரிலும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
 
அன்னாரின் மறைவைக் கேள்வியுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் கொரோனா காலகட்டத்தையும் பொருட்படுத்தாது அவரது வீட்டுக்குச்சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறிவருகின்றனர்.அன்னாரது தகனக்கிரியை பாண்டிருப்பு இந்து மயானத்தில் (11) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறந்தது.
 
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  

Related posts