மீண்டும் மின்வெட்டு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்

எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் மின்வெட்டு இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக, மின்சார சபை தெரிவித்துள்ளது.

பண்டிகை விடுமுறையுடன் மின்நுகர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என, இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எனினும், மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் போதிய மழைவீழ்ச்சி கிடைக்காமையினால் நீர் மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்மாத இறுதிக்குள் 3 தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 100 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

இத்தகைய நிலைமையினாலேயே மின்வெட்டு இடம்பெறுவதாகவும் கடந்த காலங்களில் தொடர்ச்சியான மின்வெட்டு இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 350 மெகாவாட் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீர்மின்னுற்பத்திக்காக மகாவலி நீர்த்தேக்கங்களில் இருந்து விநியோகிக்கப்படும் நீரின் அளவு தனியார் துறையின் அனல் மின் உற்பத்தி கட்டமைப்பில் இணையும் போது அந்த அளவை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts