முஸ்லீம் அரசியல்வாதிகளின் தூண்டுதலினாலும் ஆதிக்கத்தினாலும் கிழக்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் பின்தள்ளப்பட்ட நிலையில் ஒடுக்கப்படுகின்றனர் என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா
கடந்த 2019.04.21 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் தற்போது நிலவுகின்ற அரசியல் சூழ் நிலைகள் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார செயற்பாடுகள் தொடர்பான கட்சி அங்கத்தவர்களுக்கான கலந்துரையாடல் இன்று 28 ஆம் திகதி மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்
மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில்………………………..
கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட அந்த உண்ணாவிரத போராட்டத்தை நாம் உண்மையிலேயே வரவேற்கின்றோம் காரணம் வரலாற்றிலே இல்லாத வண்ணம் ஒரு பௌத்தமதகுரு இதற்காக உண்ணாவிரதம் இருந்து போராடியுள்ளார் ஆனால் அப்போராட்டமானது 30 ஆம் திகதிக்கு முன்னராக தீர்வு கிடைக்கும் விதத்தில் கைவிடப்பட்டது அன்றைய தினத்தின் பின்னர் தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போரட்டங்கள் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக இளைஞர்கள் கூறியுள்ளனர் அந்தவகையில் நாமும் இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கு முன்வந்துள்ளோம்.
தற்போது உள்ள கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்தல் தொடர்பான இந்த சிறிய விடத்திற்கு அரசாங்கம் வழிவகுத்துக் கொடுத்தாலும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தினால் அச்செயற்பாடு இன்றுவரை போராட்டத்தின் மத்தியிலேயே காணப்படுகின்றது அத்துடன் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் சுதந்திரங்கள் முஸ்லீம் பிரதிநிதிகளின் அடக்குமுறைகளினால் பின்தள்ளப்பட்ட நிலையில் ஒடுக்கப்படுகின்றனர்
கடந்த 21.04.2019 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலானது உண்மையிலேயே அதனை நாம் மிக வன்மையாக கண்டிக்கின்றோம் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் எந்தவித தீவிரவாத அமைப்புக்களும் இருக்கவில்லை யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் 2009 ஆண்டிற்கு பிற்பாடு முஸ்லீம் அரசியல்வாதிகளின் நோக்கமாக நாம் அறிந்த விடயம் கிழக்கு மாகாணத்தை ஒரு முஸ்லீம் இராட்ச்சியமாக கொண்டுவரவேண்டும் என்பதில் பலர் முன்முரமாக இருந்ததை எம்மால் அவதானிக்கமுடிந்தது அதில் முழுமையாக செயற்பட்டுவந்தவர் முன்னால் ஆளுனரான ஹிஸ்வுல்லா அவர்களது நோக்கம் சிந்தனை என்னவென்றால் அவரே பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றார் வட கிழக்கு இணையுமாக இருந்தால் இரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படும் எனவும் கிழக்கில் உள்ள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத்தள்ளப்படுவார்கள் எனவும் அவர் கூறிய விடயம் தற்போது நடைபெற்ற தாக்குதலுக்கு ஏதுவாக அமைகின்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பான்மையான சிங்கள தமிழ் மக்களை வெளியேற்றும் நோக்கோடு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பை மறைமுகமாக வைத்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தை ஒரு முஸ்லீம் மாகாணமாக மாற்றுவதற்கே அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தது.
இவர்களது செயற்பாடுகள் எமக்கு நன்றாக தெரியும் நாம் இவர்களைப்போல் மக்களை ஏமாற்றி வெளிநாட்டில் உள்ளவர்களின் பணத்தில் வாழவில்லை நாம் மக்களுக்காகவும் எமது உரிமைக்காகவும் போராடி அதன்பின்னரே ஜனநாயக முறையில் அரசியல் கட்டமைப்பிற்குள்வந்துள்ளோம். எமது போராட்ட அனுபவத்தை வைத்துக் கொண்டு பார்க்கும் போது ஹிஸ்வுல்லா அவர்கள் தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணியுள்ளார் என்பதுவும் அவருடன் பல இடங்களில் நேரில் சென்று சந்தித்துள்ளமையும் புகைப்படங்கள் எடுத்துள்ளமையும் எமக்கு தெட்டத்தெளிவாக தெரிகின்றது காரணம் அதற்குரிய ஆதாரங்கள் தற்போது வெளிவந்தவண்ணமுள்ளது.
அத்துடன் ஹிஸ்வுல்லா அவர்கள் சஹரான் என்பவருடன் ஜ.எஸ் அமைப்புடன் தொடர்பினை வைத்துக் கொண்டு பத்து வருடங்களுக்கு முன்னரே இவ்வாரான ஒரு தாக்குதலை நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளனர் இவர்களது நோக்கம் தனி முஸ்லீம்கள் மட்டும் இந்த நாட்டில் தனி இராச்சியமாக இருக்கவேண்டும் ஏனையவர்களை ஒரு அடக்குமுறையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது என நாம் அறியமுடிகின்றது.
இது தொடர்பாக நான் அதாவது ஹிஸ்வுல்லா அவர்கள் காத்தாங்குடி பகுதியில் ஆயுதக்குழுக்களுடன் செயற்படுவதாகவும் ஒருவருடத்திற்கு முன்னர் கூறியுள்ளேன் அதற்காக நான் நான்காம் மாடியில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டேன். நான் கூறிய ஒருவருடத்தின் பின்னர் இந்தவிடயம் நடைபெற்றுள்ளது அரசாங்கம் நான் கூறியவிடத்தையும் வைத்து இந்திய கூறிய ஆய்வின்படி விசாரித்திருந்தால் இத்தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் 300 க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் 500 மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கமாட்டார்கள் இதில் அரசாங்கம் விட்ட பிழை என்றுதான் நாம் இவ்விடத்தில் சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
அத்துடன் வடக்கிலும் இவ்வாறான பிரச்சனைகள் பல நடைபெறுகின்றது முஸ்லீம் அரசியல்வாதிகளினால் குறிப்பாக சொல்லப்போனால் ரீஷாத் பதூர்தீன் அவர்கள் திட்டமிட்டு மன்னார் மாவட்டத்தில் கிருஸ்தவ மதத்திற்கு இடையில் வன்முறைகளை தூண்டுதல் அதாவது அண்மையில் நடைபெற்ற திருக்கேதீஸ்வர வiலைவுப் பெயர்பலகை விவகாரத்தில் அவரது பின்புலத்திலேயே நடைபெற்றுள்ளது அதுமட்டுமல்லாமல் வவுனியா இருந்து செட்டிக்குளம் செலும் பாதை பட்டாணிச்சூடு எனும் முஸ்லீம் கிராமத்தில் அவரது பெயர் பலகை இருக்கின்ற காரணத்தினால் பாதை அபிவிருத்தி செய்கின்ற சந்தர்ப்பத்தில் அவரது பெயர்ப்பலகை உடைக்கப்படும் என்பதனால் 35 கிலோமீட்டர்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கின்றன.
இவ்வாரான செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் அந்தவகையில் மீண்டும் தொடருமாக இருந்தால் நாம் இவர்களுக்கு எச்சரிக்கின்றோம் நாம் 12000 போராளிகள் உள்ளோம் அவர்கள் மூலமாக அரசாங்கத்துடன் இணைந்து எதிராக செயற்படவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அத்துடன் அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றோம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் செயற்பட்ட உடந்தையாகவுள்ள அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் இவ்வாரான செயற்பாடுகளில் உள்ள அமைப்புக்கள் தடைசெய்யப்படவேண்டும் என்பதுடன் தகுந்த பாதுகாப்பின் மத்தியில் நாட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்திற்கு எமது கட்சியின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.